பாலியல் தொந்தரவு குமுறும் நடிகை

சிறு வயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன் என, பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், 31, வேதனையுடன் குறிப்பிட்டார். வித்யா பாலன்,
அலியா பட், ராதிகா ஆப்தே, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர் ஆகிய முன்னணி நடிகையர், பாலிவுட் படங்களில் சிறப்பாக நடித்ததை பாராட்டும் வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில், பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூர் பேசியதாவது: பெரும்பாலான பெண்கள், இளம் வயதில் பிறரின் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் கொடுமை, சிறுமியாக இருந்தபோது எனக்கும் நடந்தது. அதனால் ஏற்பட்ட வேதனையை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த சம்பவம் நீண்டகாலம் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது.இவ்வாறு அவர் பேசினார்.பிரபல நடிகை கல்கி கோச்சலின், இரண்டாண்டுகளுக்கு முன், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, திரைப்பட வாய்ப்புக்காக மற்றும் சிறு வயதில் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து, பல்வேறு நடிகையரும் தெரிவித்து வருகின்றனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget