கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி அலைஸ் லட்சுமி ராய். அதன்பின்னர் பல
படங்களில் நடித்தார். தற்போதும் சில படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் தான் பாலிவுட்டில் ஜூலி-2 என்ற படத்தை முடித்தார். விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே தமிழில் அடுத்தப்படியாக ஒரு பேய் படத்தில் நடிக்க உள்ளார் ராய் லட்சுமி. ஏற்கனவே காஞ்சனா, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற பேய் படங்களில் நடித்த ராய் லட்சுமி, இப்போது மலையாள இயக்குநர் கேஎஸ்.பாவா இயக்கும் ஒரு ஹாரர் படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான ஹாரர் படமாக, சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. இப்படம் இம்மாதம் ஆரம்பமாக இருந்தது, ஆனால் சில பிரச்னைகளால் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ளது.

கருத்துரையிடுக