சரும பிரச்சனைக்கு புத்தம் புது பேஸ் பேக்

ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து உங்கள் தினசரி சருமப் பராமரிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும். வைட்டமின் சி தவிர ஆரஞ்சுப்
பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் இவற்றை ஸ்கின் பேக் எனப்படும் முகத்தின் பொலிவைக் கூட்டி வெண்மையாக்கும் சருமப் பராமரிப்பு பூச்சுகளில் மற்றும் மாஸ்க்குகளில் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும். இந்த ஆரஞ்சுத் தோலைக் கொண்டு உங்கள் தினசரி சருமப் பராமரிப்பை எப்படி செய்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தை உரித்து தோலை வெயிலில் காயவைத்துக் கொண்டு 10 முதல் 20 பாதம் பருப்புகளை உடைத்துப் பொடியாக்கிக் கொள்ளுங்கள். ப்ளெண்டரில் இரண்டையும் போட்டு ரவை போன்ற பக்குவத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் சிறிதளவு பாலுடன் சேர்த்து பூசி வந்தால் அப்பழுக்கற்ற சருமம் பெற முடியும். தேவைப்பட்டால் இந்த கலவையைக் கொண்டு சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்யலாம்.

ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர் கலவை ஒரு அற்புதமான சருமப் பராமரிப்பிற்கு உதவும். இது சுருக்கங்களையும் கோடுகளையும் நீக்குவதோடு உங்கள் சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. ஆரஞ்சுத் தோலைக் கொஞ்சம் எடுத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு கப் தயிரில் கலந்து உங்கள் முகத்தில் சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

ஆரஞ்சுத் தோல் - பால் ஃபேஸ் மாஸ்க் உங்கள் சருமத்தை தூய்மையாகவும், ஈரப்பதத்துடனும் புத்துணர்வுடனும் வைக்க உதவுகிறது. சருமத்தை வெண்மையாக்கவும் இது ஒரு சிறந்த தீர்வாக இருப்பதுடன் ஆரஞ்சுத் தோலில் செய்யக்கூடிய பல்வேறு பராமரிப்பு முறைகளில் சிறந்தது இதுவே. முகத்தில் உள்ள பெரிய பள்ளங்கள் மற்றும் பருக்களை போக்கவும் இது உதவுகிறது. இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடரையும் பால் அல்லது பால் கீரீமையும் கலந்துகொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உங்கள் முகத்தில் பரவலாக மசாஜ் செய்யவும். இதை 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.

ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள் ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலனை பெற முடியும். ஆரஞ்சு தோல் பவுடர் கொஞ்சம் எடுத்து அதை வேப்ப இலை பவுடருடன் சேர்த்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை போல் செய்து கொள்ளவும். இதை நன்றாகக் கலந்து முகத்தில் தேய்த்துவர நல்ல பலன்கள் கிடைக்கும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget