மன மணக்கும் மஷ்ரூம் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கிலோ,
பட்டன் மஷ்ரூம்  - 400 கிராம்,

வெங்காயம் - 250 கிராம்,
தக்காளி - 200 கிராம்,
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
புதினா - 50 கிராம்,
கொத்தமல்லித் தழை - 100 கிராம்,
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
பூண்டு - 100 கிராம்,
நெய் - 100 மில்லி,
எண்ணெய் - 100 மில்லி,
கிராம்பு, பட்டை - தலா 10 கிராம்,
ஏலக்காய் - 5 கிராம்,
பிரியாணி இலை - 5 கிராம்,
தயிர் - 100 மில்லி,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, ப,.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மஷ்ரூமை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

* பாதியளவு பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து… புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* அனைத்தும் நன்றாக வதங்கி கிரேவி பதம் வந்த பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், மஷ்ரூம் சேர்த்துக் கிளறவும்.

* பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, அதன்மீது பிரியாணி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.

* சூப்பரான மஷ்ரூம் பிரியாணி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget