டைரக்டரை படபடக்க வைத்த அனுகிருஷ்ணா

கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர் அனுகிருஷ்ணா. அதையடுத்து சில படங்களில் அவர் நாயகியாக நடித்தார். அதில் சாட்டை
யுவனுக்கு ஜோடியாக நடித்த இளமி படம் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது களிறு -என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் இளமியைப்போன்று கிராமத்து கதையில்தான் உருவாகி வருகிறது.
இந்த படத்தில், வில்லனாக நடிக்கும் ரஞ்சன் என்ற நடிகர்,

அனுகிருஷ்ணாவை பலாத்காரம் செய்ய துரத்துவது போன்று ஒரு காட்சி உள்ளதாம். முதலில் இந்த காட்சியில் நடிக்க தயங்கியபோதும், அந்த காட்சி கதைக்கு அவசியமானது என்பதால் நடிக்க சம்மதித்தாராம் அனுகிருஷ்ணா. அதையடுத்து, வில்லன் அவரை துரத்தி பிடித்து பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் காட்சி படமானபோது, க்ளிசரின் போடாமலேயே ரியலாக அழுதபடி அவரிடமிருந்து தப்பித்தபடி நடித்தபோது தேம்பி தேம்பி அழுது விட்டாராம் அனுகிருஷ்ணா. அதைப்பார்த்து ஒருவேளை வில்லன் தவறுதலாக அவர் மீது நடந்து கொண்டு விட்டாரோ என்று டோட்டல் யூனிட்டும் அதிர்ச்சியடைந்து விட்டதாம்.

அதையடுத்து, டைரக்டர் சத்யா கட் சொல்லி, ஓடிச்சென்று அனுகிருஷ்ணாவிடம் விசாரித்தபோது, அவர் நிஜமாலுமே தன்னை ஒருவர் பலாத்காரம் செய்ய முயற்சித்தால் எந்த மாதிரி தனது மனநிலை இருக்குமோ அதைத்தான் அப்படி பிரதிபலித்ததாக சொன்ன பிறகுதான் டைரக்டரின் படபடப்பு நின்றதாம். மேலும், கட் சொன்ன பிறகும் அவரது அழுகையின் தாக்கம் இருந்து கொண்டிருந்ததால், அவருக்கு ஒரு மணி நேரம் ஓய்வு கொடுத்து அதன்பிறகு அடுத்த காட்சியை படமாக்கியிருக்கிறார் களிறு பட டைரக்டர் சத்யா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget