மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் திரையுலகிலும் கூட அறிமுகமான வேகத்திலேயே அதிரடியாக படங்களை கைப்பற்றி நம்பிக்கை நட்சத்திரமாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இப்போது
இவரை தொடர்ந்து காயத்ரி சுரேஷ் என்கிற நடிகையும் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
மிஸ் கேரளா 2014 பட்டம் வென்ற இவர் அறிமுகமானது கடந்த வருடம் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்த ஜமுனா பியாரி என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாகத்தான். சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்த 'ஒரேமுகம்' என்கிற படம் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது நிவின்பாலி நடிக்கும் 'சகாவு' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் ஓரளவு தெரிந்த முகமாகிவிட்டால், அடுத்தபடியாக தமிழுக்கு வந்துதானே ஆகவேண்டும்.. அப்படித்தான் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 4ஜி படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். சி.வி.குமார் தயாரிக்கும் இந்தப்படத்தை வெங்கட் பிரபாகர் என்பவர் இயக்குகிறார். இவரும் கீர்த்தி சுரேஷை போல ஒரு ரவுண்டு வருவாரா என பார்க்கலாம்.

கருத்துரையிடுக