மராத்தி சினிமாவின் முன்னணி நாயகி அதிதி பொஹங்கர். இவரது தந்தை சுதிர் பொஹங்கர் மாரத்தான் சாம்பியன், தாய் ஷோபா பொஹங்கர்
ஹாக்கி வீராங்கணை, பாட்டி சிந்து பொஹங்கர் நாடக நடிகை, மாமா பண்டிட் அஜய் ஹிந்துஸ்தானி இசை கலைஞர், தங்கை நிவேதிதா நாடக எழுத்தாளர் இப்படி பலமான பின்னணியிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் மராத்தி நாடகங்களில் நடித்தவர். அதன் பிறகு மராத்தி படங்களில் நடித்தார். லவ் செக்ஸ் அவுர் தோஹா, லய் பஹரி உள்ளிட்ட பல இந்திப் படங்களில் நடித்தவர் இப்போது தமிழுக்கு வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தில் சந்தானம் ஜோடியாக நடிக்கிறார். இதில் முதலில் டாப்ஸி நடிப்பதாக இருந்தது. தற்போது இந்திப் படங்களில் பிசியாக நடித்து வரும் டாப்ஸியால் கால்ஷீட் கொடுக்க முடியாததால் அவருக்கு பதிலாக அதிதி பொஹங்கர் நடிக்கிறார். அதிதியிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பதாவும், ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

கருத்துரையிடுக