கோலிவுட் ரேசில் அபர்ணா

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா வினோத். கேரள மாநிலம் காசர்கோடை சேர்ந்த அபர்ணாவுக்கு சினிமா மீது தனியாத தாகம். நீண்ட
போராட்டத்திற்கு பிறகு கடந்த ஆண்டு கோஹினூர் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு நிஜன் நிண்ட கூடயேயுண்டு என்ற படத்தில் நடித்தார். பைரவா படத்திற்கு ஆடிசன் நடந்தபோது அதில் கலந்து கொண்டு தேர்வானார்.

பைரவா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவரது கேரக்டரை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள். அவருக்கு ஏற்படும் ஒரு பாதிப்பை தட்டிக்கேட்கத்தான் விஜய் விஸ்வரூபம் எடுப்பார் என்கிறது பட யூனிட். படத்தில் அவர் விஜய்யின் தங்கை அல்லது கீர்த்தி சுரேசின் தோழியாக நடித்திருக்கலாம் என்ற தெரிகிறது. தமிழ் நாட்டில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே அபர்ணா வினோத்தின் ஆசை. அதனால்தான் இடையில் வந்த சில வாய்ப்புகளையும் தவிர்த்து பைரவா வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget