சியானை மெர்சலாகிய மலர் டீச்சர்

கெளதம்மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். கேரளத்து வரவான
இவர், அந்த படம் வெற்றி பெற்றதால் அதிக உற்சாகத்தில் இருந்தார். அதோடு, விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் மற்றும் சிகரம் தொடு கெளரவ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படங்களில் ஏற்கனவே கமிட்டாகியிருந்த அவர், அடுத்தபடியாக முன்னணி ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்பதற்கான முயற்சிகளிலும் இறங்கினார்.

அதன்காரணமாக, வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் நடிப்பதற்கும் முயற்சித்து வந்தார் மஞ்சிமா. ஆனால், பிரேமம் படம் பார்த்த விக்ரமிற்கு சாய் பல்லவியின் நடிப்பு பிடித்திருந்ததால் அவரை புக் பண்ணுங்கள் என்று நேரடியாகவே கூறி விட்டாராம். விளைவு, உடனடியாக கால்சீட் தர முடியாது என்று அவர் சொல்லியும், ஜனவரியில் இல்லையென்றால் பிப்ரவரியில் கொடுத்தாலும் போதும் என்று சாய் பல்லவி கொடுத்த தேதியில் கால்சீட் வாங்கியிருக்கிறார்கள்.

இதை அறிந்து பலத்த அதிர்ச்சியடைந்த மஞ்சிமா மோகன், தமிழில் ஹிட் படத்தில் நடித்தும் முன்னணி நடிகரின் படம் கைநழுவிப்போய் விட்டதே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். அதோடு, சாய் பல்லவியால் விக்ரம் பட வாய்ப்பை இழந்த மஞ்சிமா மோகன், இதற்கு பதிலாக அவருக்கு ஒரு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget