பொங்கலுக்கு ரிலிஸ் ஆகும் படங்கள் முழு விவரம்

பண்டிகை காலத்தில் படத்தை வெளியிட்டால் பணத்தை அள்ளிவிடலாம் என்பதை புரிந்து கொண்டு வேண்டும் என்றே பண்டிகையில் படத்தை
வெளியிடுவது திரையுலகில் வழக்கத்தில் உள்ளது. இப்படி அறிவிக்கப்பட்ட படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காமல்போனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிடும். வரும் பொங்கல் பண்டிகையின்போதும் இப்படிப்பட்ட காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை. அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதால் கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த வழக்கத்துக்கு மாறாக வருகிற பொங்கல் பண்டிகையின்போது எப்போதும் இல்லாத அளவில் அரைடஜனுக்கும் மேலான படங்கள் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் விஜய் நடிக்கும் 'பைரவா' படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே பொங்கல் வெளியீடு என்ற அறிவித்துவிட்டனர். இப்போது ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ', அருண் விஜய்யின் 'குற்றம்-23', ஜெய்யின் 'எனக்கு வாய்த்த அடிமைகள்', கிருஷ்ணாவின் 'யாக்கை', கலையரசனின் 'அதே கண்கள்' ஆகிய படங்களும் பொங்கல் வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இந்த படங்களுடன் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'புரியாத புதிர்' படமும் பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது. தற்போதைய சூழலில் பொங்கலுக்கு வெளியாகும் என 7 படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் பல படங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிடும் என்பதே உண்மை. முக்கியமாக புரியாத புதிர் படமே பொங்கலுக்கு வருவது டவுட் என்கிறார்கள். அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் தியேட்டர்காரர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து இன்னும் தீராமலே இருக்கிறதாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget