புத்தம் புது கெட்டப்பில் தல அஜித்

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். அஜித்துடன் காஜல் அகர்வால், கமலின் வாரிசு அக்ஷ்ராஹாசன் ஆகியோர் முக்கிய
ரோலில் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஜித், இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை தற்காலிகமாக AK57 என்று அழைத்து வருகின்றனர்.

AK57 படத்தின் ஷூட்டிங் பல்கேரியாவில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே AK57 படம் பற்றிய பல்வேறு செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் சில தினங்களுக்கு முன்னர் அஜித், பைக்கில் வீலிங் செய்யும் வீடியோ வெளியானது.

இந்நிலையில், தற்போது அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புதிய ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது. கருப்பு நிற டீசர்ட், கூலிங் கிளாஸ், தலையில் தொப்பி... என்று அஜித் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த ஸ்டில் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget