வாசன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்துள்ள படம் எனக்கு வாய்த்த அடிமைகள். ஜெய், பிரணிதா, கருணாகரன், நவீன், காளி
வெங்கட், நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். மகேந்திரன் ராஜாமணி இயக்குகிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் தயாநிதி இசை அமைக்கிறார். படத்தை பற்றி இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி கூறியதாவது:
நான் சினிமாவில் 10 வருடமாக போராடி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறேன். எனக்கு வாய்த்த அடிமைகள் என்கிற தலைப்பு தவறாக யாரையும் குறிப்பிட்டு வைக்கவில்லை. ஒரு நண்பனுக்கு வாய்த்த நண்பர்கள் அவன் அன்புக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். ஹீரோ ஜெய்க்கு காதல் தோல்வி ஏற்படுகிறது. அதனால் அவரது நண்பர்கள் அடையும் துன்பமே படத்தின் கதை. அதாவது காதல் தோல்வி அடைந்த ஜெய் தன் நண்பர்களை எப்படி டார்ச்சர் செய்கிறார் என்பது திரைக்கதை. அழுத்தமான, ஆழமானமான கதை இல்லை. ஆனால் இரண்டரை மணி நேரம் சிரிக்க வைக்கிற அற்புதமான கதை.
இதில் ஹீரோயின் கேரக்டர் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் உடையது. பல ஹீரோயின்களுக்கு கதை சொன்னபோது நடிக்க தயங்கினார்கள். நண்பர்கள்தான் பிரணிதாவை சிபாரிசு செய்தார்கள். அவருக்கு போனில்தான் கதை சொன்னேன். உடனே ஒப்புக் கொண்டார். ஒரு பாடல் காட்சிக்காக மலையின் சிகரத்திற்கு சென்றோம். அங்கு ஜீப்பில் மட்டுமே செல்ல முடியும், ஒரு பெண்ணுக்கான அடிப்படை தேவைகள் எதுவும் அங்கு கிடையாது. அதையும் பொருத்துக் கொண்டு அற்புதமாக நடித்துக் கொடுத்தார் பிரணிதா. எது சொன்னாலும், முடியாது, தெரியாது என்றே சொல்ல மாட்டார். "நான் பண்றேன் சார்" என்று சொல்வார். இப்படியான நடிகைகள் கிடைப்பது அரிது. காதல் தோல்வி நாயகன் என்றதும் இதற்கு நான்தான் சரியான ஆள் என்று உடனே ஒப்புக் கொண்டு நடித்தார் ஜெய்'' இவ்வாறு இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி கூறினார்.

கருத்துரையிடுக