நாயகி விஜயலட்சுமி கலக்கல் பேட்டி

2007-ம் வருடத்தில் இளம் நடிகர்களை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய படம் சென்னை 28. கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த
இப்படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி பெரும் வெற்றி பெற்றது. 9 வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தின் இரண்டாம் உருவாகியுள்ளது. முந்தைய பாகத்தில் நடித்த ஜெய், அரவிந் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், மிர்ச்சி சிவா, விஜயலட்சுமி, நிதின் சத்யா, விஜய் வசந்த் உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர். கூடுதலாக, மஹத், வைபவ் ஆகியோரும் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. சென்னை 28 படம் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சென்னை 28 பார்ட் 3 வரலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி விரிவாக பேசியதாவது... ‛‛சென்னை 28 இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நடிக்க கேட்டனர், ஆனால் திருமணமாகிவிட்டதால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. பின்னர் ஒருவழியாக சம்மதம் சொல்லி நடித்தேன். இரண்டாம் பாகத்தில் நடித்தது மகிழ்ச்சி. மிர்ச்சி சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா உள்ளிட்ட எனது பழைய நண்பர்களுடன் மீண்டும் நடித்தது மகிழ்ச்சி.

சென்னை 28 படம் வந்தபோது நிறைய பேருக்கு திருப்புமுனை தந்தது. ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் தந்து படமாக்கினார் வெங்கட்பிரபு, அந்தளவுக்கு திறமையான இயக்குநர். முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் கூடுதலாக கேரக்டர் கொண்டு வந்து அதை எல்லாம் ஒரே நேர்கோட்டில் வைத்து படம் இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல, வெங்கட்பிரபு ரியலி சூப்பர்.

சென்னை 28-2வில், அதே செல்வி கேரக்டரில் கார்த்திக்கின் மனைவியாக நடிக்கிறேன். முதல்பாகத்திற்கும், இந்தபாகத்திற்கும் பெரிய வித்தியாசம் என்னவென்றால் எல்லோருக்கும் திருமணமாகிவிடுகிறது, திருமணமாகிவிட்டாலே மனைவி, குழந்தை என்று நண்பர்கள் வட்டம் சுருங்கிவிடும், எப்பபார்த்தாலும் மனைவி எப்போது வீட்டுக்கு வருவீங்க என்று நச்சரித்து கொண்டே இருப்பார். மனைவி, குழந்தைகள் எல்லாம் தாண்டி சார்க்ஸ் பாய்ஸ் எப்படி மீண்டும் ஒன்று சேருகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. படம் ரொம்ப ஜாலியாக இருக்கும், அனைவரும் ரசிப்பீர்கள், படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் எல்லோரும் எப்போது சென்னை 28 பார்ட் 3 வரும் என்று கேட்பீர்கள்'' என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget