ஐஸ்வர்யா கனவு நனவாகுமா

தமிழில் இன்று வெளியாகும் பறந்து செல்லவா படத்திற்கு பிறகு கட்டப்பாவை காணோம், மோ, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்,
முப்பரிமாணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில், மலையாளத்தில் சத்யன் அத்திக்காடு இயக்கியுள்ள ஜோமொன்டே சுவிசேசங்கள் படத்திலும் நடித்துள்ளார். துல்கர்சல்மான் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேசும் நடித்துள்ளார். டிசம்பர் 26ல் இப்படம் வெளியாகிறது. இதையடுத்து நிவின் பாலி நடிக்கும் சகாவு -என்ற படத்திலும் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த படங்கள் பற்றி அவர் கூறுகையில், தமிழில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை ஆகிய படங்கள் எனக்கு எப்படி நல்லதொரு அடையாளங்களை ஏற்படுத்திக்கொடுத்ததோ, அதேபோல் மலையாளத்தில் நடிக்கும் இரண்டு படங்களுமே எனக்கு பிடித்தமான பொருத்தமான வேடங்களாக கிடைத்துள்ளது. அதோடு இரண்டுமே அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் என்பதால் இந்த படங்களுக்குப்பிறகு மலையாள சினிமா எனக்கு பெரிய வரவேற்பினை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

மேலும், எப்போதுமே யதார்த்த சினிமா எனக்கு ரொம்ப பிடித்தமானது. அது மலையாளத்தில் உள்ளது. அதனால் கதாபாத்திரங்களை உள்வாங்கி இயல்பாக நடித்துள்ளேன் என்று கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாளைய கனவாம். ஆனால் அதற்காக அவர் பலமுறை முயற்சி எடுத்தும் வாய்ப்புகள் கைகூடவில்லையாம். இப்பினும், 2017ம் ஆண்டில் தெலுங்கு சினிமா வாய்ப்பு தனக்கு கண்டிப்பாக கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சென்னையில் வளர்ந்த பெண் என்றாலும், அவரது பூர்வீகம் ஆந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget