மோட்டாரோலா நிறுவனம், அண்மையில் பல சிறப்பு வசதிகளுடனும் அம்சங்களுடனும் தன் ஸ்மார்ட் போன் ஒன்றை, Moto M என்ற பெயரில்
விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் ராம் மெமரி 4 ஜி.பி. இருப்பது இதன் சிறப்பாகும். உலோகத்தால் ஆன தகடுகள் வெளிப்புறமாக அமைய, இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 15,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் திரை 5.5 அங்குல அளவிலானது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1920 x 1080 பிக்ஸெல்கள். இதில் ஹை டெபனிஷன் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. இதன் ப்ராசசர் ஆக்டா கோர் MediaTek Helio P15 ப்ராசசராகும். 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. Mali T860MP2 GPU ப்ராசசருடன் இணைந்து இயங்குகிறது. இதன் 32 ஜி.பி. கொள்ளளவு கொண்ட போனில் 3 ஜி.பி. ராம் நினைவகமும், 64 ஜி.பி. கொள்ளளவு கொண்ட மாடலில், 4 ஜி.பி. ராம் நினைவகமும் தரப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம்.
இந்த ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்ட் மார்ஷ்மலாய் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நானோ சிம்களை இதில் இயக்கலாம். ஒரு நானோ சிஸ்டம் பொருத்தப்படும் இடத்தில் மைக்ரோ எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்தலாம்.
டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த முன்புறக் கேமரா 16 எம்.பி. திறனுடன் தரப்பட்டுள்ளது. செல்பி முன்புறக் கேமரா, 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. விரல் ரேகை தொடு உணர் தொழில் நுட்பம் இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இந்த போனின் பரிமாணம் 151.35×75.35×7.85 மிமீ. இதன் எடை 163 கிராம்.
நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. சி வகை யு.எஸ்.பி. தரப்பட்டுள்ளது.
இதன் பேட்டரி 3050 mAh திறன் கொண்டதாக உள்ளது. தங்கம் மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கின்றது.
இதன் 32 ஜி.பி. மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ. 15,999. 64 ஜி.பி. மாடல் போனின் அதிக பட்ச விலை ரூ. 17,999. இவை ப்ளிப் கார்ட் இணைய தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. சிட்டி பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்குவோருக்கு விலையில் ரூ.1000 தள்ளுபடி செய்யப்படுகிறது. பழைய மொபைல் போன்களைக் கொடுத்து, விலையில் மேலும் ரூ.2,000 தள்ளுபடி பெறலாம்.

கருத்துரையிடுக