ஐபோனில் இரண்டு சிம் கார்டு

ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதில் இரண்டு விஷயங்களைப் பெருங் குறையாகக் கூறுவார்கள். முதலாவதாக, போனின் ஸ்டோரேஜ் மெமரியை அதிகப்படுத்த முடியாது. மைக்ரோ
எஸ்.டி. கார்டினை இதில் இணைக்க முடியாது. இரண்டாவதாக, இதில் இரண்டு சிம் பயன்பாடு இதுவரை வந்ததே இல்லை. 

இந்த இரண்டில், இரண்டு சிம் பயன்பாட்டினை, ஆப்பிள் நிறுவனம் தன் அடுத்த ஐபோனில் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் புதிய வடிவமைப்புகளுக்குக் காப்புரிமை வழங்கும் United States Patent and Trademark Office (USPTO அமைப்பு, ஆப்பிள் நிறுவனத்திற்கு, இரண்டு சிம் இயக்கத் தொழில் நுட்பத்திற்கான காப்புரிமையை வழங்கியுள்ளது.

இந்த உரிமை வழங்கப்பட்டுள்ள ஆணையில், ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கள் இணைக்கப்பட்ட போன்களில், ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டென்னாவினை அணுகி இயங்கும் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம், சிஸ்டம், போன் சாதனம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இதில், காப்புரிமை பெற்ற இந்த தொழில் நுட்பம் மற்றும் வடிவமைப்பு இரண்டு சிம்களை இயக்குகிறது என்றும் எப்படி குறிப்பிட்ட சிம் அழைப்பிற்கு முன்னுரிமை தருகிறது என்றும் விளக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு சிம்மிற்கு அழைப்பு வருகையில், அதற்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. 
காப்புரிமை பெறுவதாலேயே, ஆப்பிள் நிறுவனம் அதனைப் பயன்படுத்தி போன்களை வடிவமைக்க வேண்டும் என்பதில்லை. இந்தியாவிலும், சீனாவிலும், இரண்டு சிம்கள் பயன்படுத்தக் கூடிய ஆண்ட்ராய்ட் மொபைல் போன்கள் பெரிய அளவில் விருப்பத்துடன் வாங்கி பயன்படுத்தப்படுகின்றன. 
சீன நாட்டில் பெற்ற ஓர் உரி மமும், ஐபோனில் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்துவது குறித்து கூறுகிறது.எனவே, அடுத்த ஐபோனில், இரண்டு சிம் பயன்பாட்டினை எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை
இந்தியாவில், ஐபோன்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைத்து உற்பத்தியில் ஈடுபட, ஆப்பிள் நிறுவனம் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பொதுவாகவே, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், அதிக விலையுடையதாக இருக்கும். ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், குறிப்பாக போன் விலை குறித்து அதிகம் யோசிக்கும் மக்கள் கொண்ட இந்தியாவில், தன் போன்களை அதிக அளவில் விற்பனை செய்திட வேண்டும் என்றால், அவற்றை இங்கேயே தயாரித்து வழங்குவதுதான் லாபமாக அமையும் என்று ஆப்பிள் கருதுகிறது. சீன அரசாங்கம், ஆப்பிள் நிறுவன தொழிற்சாலை சீனாவில் அமையக் கொடுத்த சலுகைகள் போல, இந்திய அரசிடம் இருந்தும் சலுகைகளை ஆப்பிள் எதிர்பார்க்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget