உடலை அழகுப்படுத்த என்ன செய்யலாம்

1. நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த
கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்னைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெய்யை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.

2. கடலை மாவு

முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

3. மஞ்சள்

இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

4. குங்குமப்பூ

இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்னைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.

5. ரோஸ் வாட்டர்

புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பெண்கள் அழுக்கு மற்றும் முகத்திலிருந்து  எண்ணெய் பசையை  நீக்கவும் பயன்படுத்தலாம்.

6. சந்தனம்

இந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget