ஒரு ஸ்கூப் நியூஸை பக்கத்து தெருவில் உள்ள ப்ரெண்டிடம் சொல்லலாம் என்று நாம் நினைக்கும்போதே, சில நொடிகளிலேயே அது ஊரே
அறிந்த பழைய நியூஸ் ஆகிவிடுகிறது. டிஜிட்டல் பாய்ச்சல் அப்படி. போன் கேபிள், கம்ப்யூட்டர் கேபிள் என தனித்தனியாக இணைத்து ஒரு விஷயத்தை இணையத்தில் ஏற்றுவதற்குள்..
அடுத்தநாள் வந்துவிடுகிறது. அந்த துயரை டக்கென துடைக்கிறது இந்த ஆல் இன் ஆல் 1 கேபிள்ஸ். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள Itiwant என்ற நிறுவனம், போனஸ் துயரின்றி உழைத்து 1கேபிள்ஸ் என்ற சூப்பர் கேபிளை கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள ஸ்பெஷல், இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன்களை பவர்பேங்கிலிருந்து, கம்ப்யூட்டர் கீபோர்டு, கேமிரா, கேமிங் ஜாய்ஸ்டிக், பிரிண்டர் உட்பட பல பொருட்களோடு இணைத்து விஷயங்களை உடனே பகிரலாம். சுருக்கமாக உங்கள் போன்தான் இனி உங்களது புதிய கம்ப்யூட்டர்.
1கேபிள்ஸ் கேபிளின் சிறப்பே இதன் கனெக்டர்கள்தான். இதனை மேல் நோக்கி நகர்த்தினால் யுஎஸ்பி போர்ட் மூலம் பொருட்களை இணைக்கலாம். இதனை பின்னால் உள்தள்ளிய வகையிலும் பல பொருட்களினை இணைக்க முடிவது இதன் அமர்க்கள பிளஸ் பாயிண்ட். டிஎஸ்எல்ஆர் கேமிராக்களில் ரசனையோடு கிளிக் செய்த அத்தனை படங்களையும் போனோடு 5 நிமிடங்களில் இணைத்து பேஸ்புக்கில் போட்டு ஒளி ஓவியர் என புகழோடு லைக்ஸ் வாங்குவதும் இனி ஈஸிதான்.
டேப்லட் வைத்திருக்கிறீர்கள், அதுவே மினி கணினி என்பதால் அதில் டைப் செய்ய கீபோர்டையும் எளிதாக 1கேபிள்ஸ் மூலம் இணைத்து ஆன் தி வேயில் வேலை பார்த்து ஐயம் பிஸி என நிஜம் சொல்லலாம். அதுபோலவே போனிலிருந்து படங்களை நொடியில் பிரிண்டர்களுக்கு அனுப்பி நமக்குள்ளிருக்கும் அட்டகாச கலைஞனை தண்ணீர் தெளித்து எழுப்பலாம்.
இதில் ஏ1 டைப் சி மொபைல்போன்களுக்கும், மேக் கம்ப்யூட்டர்களுக்கும், ஏ2 கனெக்டர்கள் ஐபேட், ஐபோன்களை இணைக்கவும், ஏ3 மைக்ரோ யூஎஸ்பி கனெக்டர்களில் ஆப்பிள் நிறுவன கருவிகளையும், பிறவற்றையும் எளிதில் இணைத்து மகிழலாம். நைலான் வயர்கள் என்பதால் எதையும் தாங்கும் வலிமையுடன் டேட்டாவை அனுப்பும்போதும் சிறுத்தை பாய்ச்சல் காட்டுகிறது. இதில் உள்ள கேபிள்களில் உங்களிடம் உள்ள கருவிகளுக்கு ஏற்ப கனெக்டர்களை வாங்கி பயன்பெறலாம்.
1கேபிள்ஸ் கனெக்டர்களை தனியாக வாங்கினால் 1027 ரூபாய் பில் போடுவார்கள். மூன்று கனெக்டர்களையும் காம்போவாக சேர்த்து வாங்கினால் 2669 ரூபாய் காலியாகும். டிஜிட்டல் வாலட்டை தேய்த்து டக்கென வாங்கி யூத் கம்யூனிட்டியில் இணைந்தேயிருங்கள்.

கருத்துரையிடுக