கவர்ச்சி புயலாய் மிரட்ட வரும் வைகா

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சி கதவுகளை இறுக மூடிக்கொள்வதுதான் வழக்கம். ஆனபோதும்
அப்படி வந்த நயன்தாரா, அமலாபால் போன்ற சில நடிகைகள் பின்னர் தங்களது கொள்கைகளை தளர்த்திக்கொண்டு கவர்ச்சிகரமாகவும் நடித்தனர். இந்த நிலையில், மலையாளத்தில் சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து விட்டு தற்போது அறுவடை என்ற படம் மூலம் தமிழுக்கு இறக்குமதியாகிருக்கும் வைகா என்ற புதுமுக நடிகை வந்த வேகத்திலேயே கதைக்கு தேவையென்றால் கவர்ச்சி சேவையாற்ற நான் தயார் என்று கோலிவுட்டுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

மேலும், அறுவடை படத்தில் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் இந்த வைகா, முதல் படத்தில் நார்மலான கிளாமரைத்தான் வெளிப்படுத்துகிறாராம். ஆனால் அதுவே கமர்சியல் டைரக்டர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் என்று கூறும் அவர், நான் சிட்டியிலேயே பிறந்த வளர்ந்த பெண். அதனால் எனக்கு கிளாமர் உடையணிவது ஒன்றும் புதிய விசயமல்ல. அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும்போது அதிரடி கிளாமர் ஹீரோயினாக உருவெடுப்பேன் என்று கூறும் வைகா, தற்போது முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்ற தீவிர முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget