டப்பிங் பேசிய அசத்திய தன்யா

ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானவர் மறைந்த நடிகர் ரவிச்சந்திரன். அதன்பிறகு இதயக்கமலம், குமரிப்பெண்,
மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, அதே கண்கள் என பல படங்களில் நாயகனாக நடித்தவர், ஊமை விழிகள் படத்தில் வில்லனாக உருவெடுத்தவர், தொடர்ந்து மாறுபட்ட கேரக்டர்களில் நடித்தார்.

பின்னர், அவரது மகன் ஹம்சவர்தனும் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா, பலே வெள் ளையத்தேவா படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். முக்கியமாக, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி பேசும் நடிகைகளே தமிழ் சினிமாவிற்குள் அதிகமாக இறக்குமதியாகி வரும் நிலையில், நன்றாக தமிழ் பேசக்கூடிய தமிழ் நடிகை தன்யா வந்திருப்பது பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதோடு, முதல் படத்திலேயே தனக்குத்தானே டப்பிங்கும் பேசியிருக்கிறார் தன்யா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget