தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. பாகுபலியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தில்
நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை தமன்னா கூறியதாவது... ‛‛என் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படம் பாகுபலி. என் சினிமா கேரியர் மோசமாக இருந்த நேரத்தில் பாகுபலியில் வாய்ப்பு வந்தது. எதிர்பாராத விதமாக அந்த வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்லப்போனால் அந்த வாய்ப்பை நான் பெற்ற போது ஒரு கனவு போன்று இருந்தது. தற்போது பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறேன். இந்தமாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். பாகுபலி படத்திற்காக நான் உயிரையும் கொடுப்பேன், தேவைப்பட்டால் கொலையும் செய்வேன்''.
இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.

கருத்துரையிடுக