பவுலிங், பேட்டிங் என, இரு பிரிவுகளிலும் அசத்தி ‘ஆல் ரவுண்டராக’ ஜொலித்து வரும் அஷ்வின், இந்த ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட்
வீரர் என, இரு பிரிவுகளில் ஐ.சி.சி., விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் விருது தரப்படும். 2016ம் ஆண்டுக்குரிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதற்காக, கடந்த 2015, செப்., 14 முதல், 2016, செப்., 20 வரையில் நடந்த போட்டிகளில், வீரர், வீராங்கனைகள் வெளிப்படுத்திய திறமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
சிறந்த ‘பார்ம்’:
இதில், இந்தியாவின் ‘நம்பர்–1’ ஆல் ரவுண்டர்’, தமிழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், இந்த ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஐ.சி.சி., நிர்ணயித்த காலத்தில் இவர், 8 டெஸ்டில் பங்கேற்று, 48 விக்கெட் வீழ்த்தி. 336 ரன் குவித்துள்ளார். தவிர, 19 ‘டுவென்டி–20’ போட்டிகளில் 27 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
சமீபகாலமாக டெஸ்ட் அரங்கில் மிரட்டி வரும் அஷ்வின், கடந்த ஜூலை–ஆகஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த 4 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தி, பேட்டிங்கில் 2 சதம் உட்பட மொத்தம் 235 ரன் குவித்தார்.
சச்சினுக்கு அடுத்து:
தவிர, இந்த ஆண்டு மட்டும் 12 டெஸ்டில், 72 விக்கெட் கைப்பற்றினார். தவிர, டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர் ஆனார்.
தற்போதைய சிறந்த டெஸ்ட் பவுலர், ‘ஆல்–ரவுண்டர்’ வரிசையில் அஷ்வின் தான் ‘நம்பர்–1’ ஆக உள்ளார். தவிர, டிராவிட் (2004), சச்சினுக்குப் (2010) பின், ஐ.சி.சி.,யின் சிறந்த வீரர் விருது பெறும் இந்திய வீரர் அஷ்வின் தான். ஒட்டு மொத்த அளவில் இந்த விருதை வெல்லும் 12வது வீரரானார்.
இரண்டாவது இந்தியர்:
தவிர, இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முன்னாள் கேப்டன் டிராவிட்டுக்குப் பின் (2004), ஒரே ஆண்டில் சிறந்த வீரர் மற்றும் டெஸ்ட் வீரர் விருது வெல்லும் இரண்டாவது இந்திய வீரரானார்.
பெருமை தான்:
இது குறித்து அஷ்வின் கூறுகையில்,‘‘ ஒரே ஆண்டில் ஐ.சி.சி.,யின் இரண்டு விருதுகளை வென்றது ‘ஸ்பெஷல்’ தான். டிராவிட், சச்சினுக்குப்பின் இந்த விருதை வெல்லும் இந்திய வீரர் என்பது பெருமையாக உள்ளது. இதை எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். இவர்கள்தான், எனது வெற்றிக்கு துாணாக இருந்தனர். சக வீரர்கள், பயிற்சியாளர் கும்ளேயின் ஆதரவுக்கும் நன்றி,’’ என்றார்.
அஷ்வின் செயல்பாடு
போட்டி விக்., ரன்
8 டெஸ்ட் 48 336
19 ‘டுவென்டி–20’ 27 57
3 ஒரு நாள் 3 1
பேட்டிங் சராசரி 42.00 ரன்
பவுலிங் சராசரி 15.39 ரன்
* தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரில் 31 விக்கெட் வீழ்த்தினார்.
* தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் இவர் தான்.* ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை ‘டுவென்டி–20’ தொடரை வெல்ல உதவினார்.
தேர்வு செய்யாதது ஏன்
ஐ.சி.சி.,யின் சிறந்த வீரர்கள் அடங்கிய ‘கனவு’ டெஸ்ட் அணியில் இந்தியா சார்பில் அஷ்வினுக்கு மட்டும் தான் இடம் கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி தேர்வு செய்யப்படவில்லை.
அதாவது, ஐ.சி.சி., நிர்ணயித்த 2015, செப்., 14 மற்றும் 2016 செப்., 20 காலத்தில், இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த கோஹ்லி, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் அசத்தினார்.
தொடர்ந்து 8 டெஸ்டில் இந்திய அணி தோற்காமல் வலம் வந்தது. தற்போது இந்த சாதனை 18 ஆக அதிகரித்துள்ளது. பேட்டிங்கில் 8 டெஸ்டில் ஒரு இரட்டை சதம் (200), ஒரு அரைசதம் உட்பட மொத்தம் 451 ரன்கள் தான் எடுத்தார். சமீபத்தில் இவர் அடித்த 211, 167, 235 ரன்கள் அடுத்த ஆண்டு கணக்கில் தான் வரும். இதனால் தான் அணியில் கோஹ்லி தேர்வு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.
சிறந்த டெஸ்ட் அணி
அலெஸ்டர் குக் (இங்கிலாந்து, கேப்டன்), வார்னர் (ஆஸி.,), வில்லியம்சன் (நியூசி.,), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஆடம் வோஜஸ் (ஆஸி.,), பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து, விக்கெட் கீப்பர்), ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), அஷ்வின் (இந்தியா), ஹெராத் (இலங்கை), ஸ்டார்க் (ஆஸி.,), ஸ்டைன் (தென் ஆப்ரிக்கா), 12வது வீரர் ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.,).
ஒருநாள் அணி கேப்டன் கோஹ்லி
டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாத கோஹ்லி, சிறந்த ஒருநாள் ‘கனவு’ அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தவிர, இந்தியாவின் ரோகித் சர்மா, ஜடேஜாவும் இடம் பெற்றனர்.
அணி விவரம்:
கோஹ்லி (இந்தியா, கேப்டன்), வார்னர் (ஆஸி.,), குயின்டன் டி காக் (தென் ஆப்ரிக்கா), ரோகித் சர்மா (இந்தியா), டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), பட்லர் (இங்கிலாந்து), மிட்சல் மார்ஷ் (ஆஸி.,), ஜடேஜா (இந்தியா), ஸ்டார்க் (ஆஸி.,), ரபாடா (தென் ஆப்ரிக்கா), சுனில் நரைன் (வெ.இண்டீஸ்), 12வது வீரர் இம்ரான் தாகிர் (தென் ஆப்ரிக்கா).
யார் யாருக்கு விருது
ஒட்டுமொத்த சிறந்த வீரர்: அஷ்வின் (இந்தியா)
டெஸ்ட் வீரர்: அஷ்வின் (இந்தியா)
ஒருநாள் வீரர்: குயின்டன் டி காக் (தென் ஆப்ரிக்கா)
‘டுவென்டி–20’ வீரர்: பிராத்வைட் (வெ.இண்டீஸ்)
புதுமுக வீரர்– முஷ்தபிகுர் ரஹ்மான் (வங்கதேசம்)
ஒருநாள் வீராங்கனை: சுஜி பேட்ஸ் (நியூசி.,)
‘டுவென்டி–20’ வீராங்கனை – சுஜி பேட்ஸ் (நியூசி.,)
அம்பயர்: எராஸ்மஸ் (தென் ஆப்ரிக்கா)
உறுப்பு நாடுகளுக்கான விருது– முகமது சாஜத் (ஆப்கன்)
விளையாட்டு உணர்வு கொண்டவர்: மிஸ்பா உல் ஹக் (பாக்.,)

கருத்துரையிடுக