சின்னத்திரை நாயகி அகல்யா

ஆதித்யா சேனலில் ஒளிபரப்பாகி வரும் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க, வாலு பசங்க ஆகிய நிகழ்ச்சிகளை டவுட் செந்திலுடன் இணைந்து
வழங்கி வருபவர் அகல்யா வெங்கடேசன். தனது குறும்புத்தனமான நகைச்சுவை கலந்த பேச்சினால் குறுகிய காலத்தில் ஏராளமான நேயர்களை கவர்ந்திழுத்து விட்டார்.

சின்னத்திரையில் எனது பிரவேசம் பற்றி சொல்ல வேண்டுமென்றால், இமயம் டிவி, ராஜ் டிவியில் நான் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் சுமதி என்ற கேரக்டரில் நடித்தேன். ஆக, ஏற்கனவே நான் நேயர்களுக்கு பரிட்சயமாகியிருந்தேன். அதன்பிறகுதான் ஆதித்யா சேனலில் டவுட் செந்தில் மூலம் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க? மற்றும் வாலு பசங்க நிகழ்ச்சிகளில் இடம்பெற்றேன்.

இதில் வாலு பசங்க லைவ் நிகழ்ச்சி. மாமோய் நீங்க எங்க இருக்கீங்க கணவன்-மனைவிக்கிடையே நிகழும் ஊடல் கூடலை சொல்லும் நிகழ்ச்சி. ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு பிரச்சினை. அதை காமெடி கலந்து அழகாக எடுத்து வருகிறார். அதனால் அதிக ஈடுபாட்டுடன் அந்த நிகழ்ச்சியில் நான் நடித்து வருகிறேன். ஆக, அதில் பர்பாமென்ஸ் பண்ண எனக்கு நல்லதொரு வாய்ப் பைக்கொடுத்த டவுட் செந்திலுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

மேலும், தல அஜித்தின் தீவிரமான ரசிகை நான். அவர் நடித்த ஒரு படத்தைகூட விடமாட்டேன். அவர் எப்படி நடித்தாலும் நான் ரசிப்பேன். இப்போது நானும் நடிகையாகி விட்டதால், அஜித்துக்கு தங்கையாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் எனது பெரிய ஆசையாக உள்ளது. இதுவரை நான் அஜித்தை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கண்டிப்பாக அவரை சந்திப்பேன். சமீபத்தில் எனது பிறந்த நாளின்போது அஜித் உருவம் பொறித்த டீசர்ட் அணிந்த போட்டோவை இணைய பக்கத்தில் வெளியிட்டேன். அப்போது அஜித் ரசிகர்கள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.

அதேபோல், சினிமாவில் கொஞ்சம் நேரம் வந்தாலும் மனதில் நிற்கிற மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். சில வாய்ப்புகள் வந்தபோதும் டம்மியான வேடங்களாக இருந்தால் தவிர்த்து விட்டேன். ஆனால் கூடிய சீக்கிரமே நான் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். குறிப்பாக, என் அப்பா வெங்கடேசன், அம்மா சித்ரா ஆகியோர் என்னை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். எனது பர்பாமென்சில் உள்ள நிறைகுறைகளை எனக்கு புரிய வைக்கிறார்கள். என் வளர்ச்சிக்கு எனது குடும்பம் உறுதுணையாக இருந்து வருவதால், என்னால் இந்த துறையில் இன்னும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற உற்சாகம் ஏற்பட்டுள்ளது என்கிறார் அகல்யா வெங்கடேசன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget