லிமிட் தாண்டாமல் நடிபேன் ரெஜினா

ராஜதந்திரம் படத்திற்கு பிறகு தெலுங்குக்கு சென்று விட்ட ரெஜினா, தற்போது தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, ஜெமினிகணேசனும்
சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன் என நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், ஆரம்பகாலத்தில் கிளாமராக நடிக்க மறுத்து வந்த ரெஜினா, இந்த படங்களில் கிளாமராக நடித்து வருவதாக ஒரு செய்தி பரவியுள்ளது. அதனால் அதுபற்றி அறிய ரெஜினாவைக்கேட்டபோது, அதை மறுக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், நான் நடிக்க வந்ததில் இருந்தே என்னை கிளாமராக நடிக்க சொல்லி டைரக்டர்கள் வற்புறுத்துகிறார்கள். எனக்கும் அப்படி நடிப்பதில் ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால், எனது உடல்கட்டுக்கு நான் கிளாமராக நடித்தால் அழகாக இருக்காது. உடம்பை கவர் பண்ணும் உடையணிந்து நடித் தால்தான் நான் அழகாக தெரிவேன். அதனால்தான் தொடர்ந்து கிளாமருக்கு மறுப்பு சொல்லி வருகிறேன்.

அதேசமயம் மாடர்ன் கெட்டப்பில் நான் நடிக்க மறுக்கவில்லை. இப்போதும் சில படங்களில் ஓரளவு பட்டும் படாமலும் கிளாமரை வெளிப்படுத்திதான் வருகிறேன். என்றாலும், எந்த அளவுக்கு கிளாமரை வெளிப்படுத்தினால் நான் அழகாக இருப்பேனோ அந்த லிமிட்டை தாண்டாமல் நடித்து வருகிறேன் என்கிறார் ரெஜினா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget