கோவாவில் புத்தாண்டு கொண்டாடும் ராகுல் ப்ரீத்தி சிங்

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நாணாகு ப்ரேமதோ, அல்லு அர்ஜூனுடன் சரைய்னோடு, ராம் சரணுக்கு ஜோடியாக துருவா என ராகுல் ப்ரீத்தி சிங் இவ்வருடம் நடித்த மூன்று படங்களும் ஹிட்
அடித்துள்ளது. விக்ரம், விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு தமிழ் படவாய்ப்புகளும் கிடைத்துள்ளன. மகிழ்ச்சிகரமாக கழிந்த 2016ஆம் ஆண்டிற்கு விடை கொடுக்கவும் 2017 ஆம் ஆண்டை வரவேற்கவும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் ராகுல் ப்ரீத்தி. டிசம்பர் 30 ஆம் தேதி தனது நண்பர்கள் 25 பேரை அழைத்துக் கொண்டு கோவா செல்ல திட்டமிட்டுள்ள ராகுல் ப்ரீத்தி சிங் கோவாவில் புத்தாண்டு கொண்டாட வெகு விமர்சையாக ஏற்பாடு செய்து வருகின்றாராம். பொதுவாக தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் குத்தாட்டம் போடும் ராகுல் ப்ரீத்தி சிங் வரும் புத்தாண்டை நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். சாய் தரண் தேஜுக்கு ஜோடியாக வின்னர் படத்தில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங், பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸிற்கு ஜோடியாக புதிய படத்திலும் நடித்து வருகின்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget