சின்னத்திரையா முடியாது ஸ்ரேயா ரெட்டி

நடிகை ஸ்ரேயா ரெட்டி ஆரம்பத்தில் எஸ்.எஸ்.மியூசிக் சேனல் தொகுப்பாளினியாகத்தான் தனது மீடியா வாழ்க்கையை துவக்கினார். அந்த காலத்திலேயே
கிளாமர் உடையில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் தொகுப்பாளினியாக கொடிகட்டிப் பறந்தார். அதன் பிறகு சாமுராய் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தவர் பின்னர் தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து விட்டு திமிரு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தமிழில் வெயில், காஞ்சிவரம், பள்ளிக்கூடம் படங்களில் நடித்தார். தற்போது சில சமயங்களில், அண்டாவ காணோம் படங்களில் நடித்து வருகிறார்.

மீண்டும் நடிக்க வந்துள்ள ஸ்ரேயா ரெட்டியை சில சேனல்கள் நடன நிகழ்ச்சிக்கு நடுவராகவும், காமெடி நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகவும் பணியாற்ற அழைத்தனர். ஆனால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்ப மறுத்து விட்டார். "சில சேனல்கள் என்னை அழைத்தது உண்மை. என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். சும்மா சேலை உடுத்தி வந்து உட்கார்ந்திருந்தால் போதும் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். அப்படி என்னால் முடியாது என்று கூறிவிட்டேன். இப்போதுள்ள நிகழ்ச்சிகளில் எனக்கு பெரிய உடன்பாடில்லை. அதனால் விருப்பமும் இல்லை" என்கிறார் ஸ்ரேயா ரெட்டி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget