நெகட்டிவ் கேரக்டரில் ஷிவதா

மலையாள நடிகையான ஷிவதா 2014ம் ஆண்டு வெளிவந்த 'நெடுஞ்சாலை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்தில் பாவாடை, சட்டையுடன் கிளாமராக நடித்து முதல்
படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தார். அந்தப் படமும் சுமாராக ஓடியது. 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஷிவதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பின் கடந்த வருடம் வெளிவந்த 'ஜீரோ' படத்தில் நடித்தார். அவர் தமிழில் நடித்த மூன்றாவது படமான 'அதே கண்கள்' நேற்று வெளிவந்தது. 'சி 3' படம் நேற்று திட்டமிட்டபடி வெளிவராததால் அடுத்த மாதம் வெளியாவதாக இருந்த 'அதே கண்கள்' படத்தை நேற்றே வெளியிட்டார்கள். திடீரென படம் வெளிவந்தாலும், வேறு புதிய தமிழ்ப் படங்கள் இல்லாதததால் 'அதே கண்கள்' படத்திற்கு நேற்று ஓரளவிற்கு ஓபனிங் இருந்தது.

'மெட்ராஸ், கபாலி' படங்களில் நடித்த கலையரசன் நாயகனாக நடிக்க, ஷிவதா, ஜனனி ஐயர் நாயகிகளாக 'அதே கண்கள்' படத்தில் நடித்துள்ளனர். இருந்தாலும் படத்தில் 'நெகட்டிவ்' கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷிவதா மீதுதான் அனைவரின் கண்களும் பதிந்துள்ளது. படத்தின் ஆரம்பத்தில் புடவையில், கண்ணியமான குடும்பப் பெண்ணாக வருபவர், படத்தின் திருப்புமுனைக்குக் காரணமான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பை படம் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.

திருமணம் நடந்த பின் நடிகைகளுக்கு வரவேற்பு இருக்காது என்று சென்டிமென்ட் பேசும் தமிழ்த் திரையுலகத்தில் ஷிவதாவிற்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget