கோலிவுட் புது வரவு அர்த்தனா

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சீத்தம்மா ஆண்டாளு ராமைய்யா சிட்றாளு -என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை அர்த்தனா.
அதன்பிறகு மலையாளத்தில் முத்துகாவ் - என்ற படத்தில் நடித்தவர், தற்போது தமிழில் வெண்ணிலா கபடிக்குழு-2, தொண்டன் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படம் என ஒரே நேரத்தில் மூன்று தமிழ்ப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நாயகியாக நடித்த சரண்யா மோகனைப்போன்றே அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ஒரு புதுமுக நடிகை வேண்டும் என்று கேரளா சென்று இந்த அர்த்தனாவை தேடிப்பிடித்து கொண்டு வந்துள்ளனர். அப்படத்தில் அவர் அசத்தலாக பர்பாமென்ஸ் கொடுப்பதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் வெளியானதை அடுத்து, தனது தொண்டன் படத்திற்கு அப்போது நாயகி தேடி வந்த சமுத்திரகனியும் உடனடியாக அர்த்தனாவை புக் பண்ணிவிட்டார்.

ஆக, வெண்ணிலாக படிக்குழு-2 படத்தைத் தொடர்ந்து தொண்டன் படத்திலும் தற்போது நடித்து வருகிறார் அர்த்தனா. இதையடுத்து, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் அவர். ஆக, தமிழில் வந்த வேகத்திலேயே மூன்று முன்னணி டைரக்டர்களின் படங்களை கைப்பற்றி விட்ட அர்த்தனாவை மேலும் சில புதிய படவாய்ப்புகள் தேடிச்சென்று கொண்டிருக்கும் நிலையில், கைவசமு முள்ள படங்களை முடித்த பிறகே புதிய படங்களுக்கான கதையை கேட்பேன் என்று கூறிவிட்டார் அர்த்தனா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget