தமன்னாவுக்குப் போட்டியான கிர்தி

கிர்த்தி, கிர்தி, கிருதி, கிருத்தி என ஒரு பெயர்க் குழப்பத்துடன் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார் கிரிதி கர்பந்தா. டில்லியைச் சேர்ந்த கிர்தி
சினிமாவில் நடிக்க வந்து 7 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2009ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'போனி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 2010ம் ஆண்டு 'சிரு' என்ற படத்தின் மூலம் கன்னடத்திலும் அறிமுகமானார். தொடர்ந்து சில தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த 'ராஸ் - ரிபூட்' படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமானார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தமிழுக்கு வந்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள 'ப்ரூஸ் லீ' படம் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளார் கிரிதி கர்பந்தா. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கிரிதி தான் நேற்று டாக் ஆப்த டவுன் ஆக இருந்தார்.

தோற்றத்தில் ஏறக்குறைய தமன்னாவைப் போலவே இருக்கும், கிரிதி பேசினாலும் தமன்னாவின் குரலிலேயே பேசுகிறாரே என ஆச்சரியப்பட்டார்கள். தமன்னாவைப் போலவே உடல்வாகு, நிறம், கூரான மூக்கு என தோற்றத்தில் தமன்னாவின் ஜெராக்ஸ் போலவே இருக்கிறார்.

மற்ற ஹீரோயின்கள் என்றால் போட்டோவிற்கு போஸ் கொடுக்கவே யோசிப்பார்கள். ஆனால், நேற்று கிரிதி கொஞ்சும் கூட யோசிக்காமல் அனைத்து போட்டோகிராபர்களுக்கும் போஸ் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தமன்னாவின் இடத்தை கிரிதி தட்டிப் பறித்தாலும் ஆச்சரியமில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget