அதிரடி ஹீரோயினான ராதிகா ஆப்தே

பிரகாஷ்ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தில் தமிழுக்கு வந்தவர் ராதிகா ஆப்தே. பாலிவுட் படங்களில் அதிகமாக நடித்து வரும் இவர், அவ்வப்போது ஆங்கில புத்தகங்களின்
அட்டைப்படங்களுக்கு ஆபாச போஸ் கொடுத்து வருவதால் இளவட்ட ரசிகர்களின் பேவரிட் ஹீரோயினாக இடம் பிடித்துள்ளார். மேலும், தமிழில் அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றியை கொடுக்காத நிலை யில், ரஜினி நடித்த கபாலி படத்தில் அவரது மனைவியாக நடித்தார் ராதிகா ஆப்தே. ஆனால் அப்படம் சூப்பர் ஹிட்டான போதும் அதன்பிறகு ராதிகா ஆப்தேவுக்கு தமிழில் புதிய படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அடுத்தபடியாக விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்கள் புக்காகப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த ராதிகா ஆப்தே எந்தவித அறிகுறியும் இல்லாததால் ஏமாற்றத்துடன் மறுபடியும் இந்திக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், பல மாதங்களுக்குப்பிறகு இப்போது சவரக்கத்தி படத்தை இயக்கி வரும் டைரக்டர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா தான் இயக்கும் அடுத்த படத்திற்கு ராதிகா ஆப்தேயை புக் பண்ணியுள்ளார். ஆக்சன் கதையில் தயாராகும் அந்த படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோயினாக களமிறங்கும் ராதிகா ஆப்தேவிற்கு சண்டை காட்சியில் நடிக்க ஒரு ஹாலிவுட் பைட் மாஸ்டர் பயிற்சி கொடுக்கப்போகிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget