கோடம்பாக்கம் புது வரவு அகல்யா

விஜயகாந்த் நடித்த சுதேசி படத்தை இயக்கிய ஜேப்பி கடைசியாக கரண் நடித்த உச்சத்துல சிவா படத்தை இயக்கினார். தற்போது அவர் இயக்கி வரும் படம் பணம் காய்க்கும் மரம். இதில் அக்ஷய் என்ற
புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். அகல்யா, அன்விகா என்ற இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். சோனு பாண்டே, ராஜ்குல்கர்னி வில்லனாக நடிக்கிறார்கள். இயக்குனர் ஜேப்பி காமெடியனாக நடிக்கிறார். எல்.வி.கணேசன் இசை அமைக்கிறார். ஹார்முக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி ஜேப்பி கூறியதாவது: பணம் காய்க்கும் மரம் பணம் பற்றிய கதைதான். ஆனால் அதைவிட வாக்கை காப்பாற்றும் படம். பெற்றவர்கள் கொடுத்த ஒரு வாக்கை அவர்களது மகன்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்கிற கதை. ரோட் மூவி என்றும் சொல்லலாம். பரபர ஆக்ஷனும், கலகல காமெடியும் கலந்த கலவை. கதையின் போக்கிற்கு இரண்டு ஹீரோயின்கள் தேவைப்பட்டதால் அகல்யாவும், அன்விகாவும் நடிக்கிறார்கள்.

ஒரு முக்கிய காமெடி நடிகர் நடிப்பதாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர் உச்சத்துல சிவா படத்தில் நான் நடித்த ஒரு கேரக்டரை பார்த்துவிட்டு நீங்களே நடித்து விடுங்கள் என்றார் அதனால் நான் காமெடி கேரக்டரில் நடிக்கிறேன். ஹீரோவின் அண்ணன் கேரக்டர். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. விரைவில் வெளியிட இருக்கிறோம் என்றார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget