திரிஷாவுக்கு தோழியான காயத்ரி

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்த டூரிங் டாக்கீஸ் படத்தில் அறிமுகமானவர் காயத்ரி. அதன்பிறகு சாயா படத்தில் நாயகியாக நடித்துள்ள அவர், அதைத் தொடர்ந்து மோகினி, சிவலிங்கா
படங்களின் நாயகிகளான த்ரிஷா ரித்திகாசிங்கிற்கு தோழியாக நடித்துள்ளார். இதுதவிர, ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படம், டைரக்டர் பாண்டிராஜ்-ஜி.வி.பிரகாஷ் இணைந்துள்ள படங்களிலும் கேரக்டர் நடிகையாக நடித்து வருகிறார்.

இதுபற்றி காயத்ரி கூறுகையில், முதல் படமே எஸ்.ஏ.சி சாரின் படம் கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சி. அதன்பிறகு பல படங்களில் நடிக்கிறேன். இதில் ஹீரோயினி மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடித்து வருகிறேன். மேலும், இன்னும் நான் பெரிய நடிகையாகி விட்டதாக நினைக்கவில்லை. அதனால் என்னிடம் யாராவது மீடியாக்கள் பேட்டிக்கு அணுகினால்கூட நான் இப்போது வேண்டாம். நான் நடித்து வரும் படங்கள் வெளியாகட்டும். அப்போதுதான் பேசுவதற்கு ஏதாவது விசயம் இருக்கும் என்று சொல்லி அனுப்புகிறேன் என்கிறார் காயத்ரி. அதோடு நானாக என்னைப்பற்றி பேசுவதை விட, நான் நடித்த படங்களைப்பார்த்து விட்டு என்னைப்பற்றி பேச வேண்டும். அந்த படங்கள் என்னை பேச வைக்க வேண்டும். அதுதான் எனக்கு பிடிக்கும் என்கிறார் காயத்ரி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget