விவசாயி மனைவியான நடிகை வைகா

பார்த்திபன், விமல் நடிப்பில் கரு.பழனியப்பன் இயக்கிய படம் ஜன்னல் ஓரம். இப்படம் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன்,
பிஜூமேனன் நடிப்பில் வெளியான ஆர்டினரி என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த ஆர்டினரி படத்தில் பிஜூ மேனனுக்கு ஜோடியாக நடித்தவர் வைகா. அந்த படத்திற்கு பிறகு சில மலையாள படங்களில் அழுத்தமான கேரக்டர்களில் நடித்த வைகா, தற்போது தமிழில் அறுவடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் தனது வேடம் குறித்து வைகா கூறுகையில், சமீபகாலமாக விவசாயம் என்பது பெரிய சவாலாக இருந்து வருகிறது. முக்கியமாக தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது. அதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்யும் பரிதாப நிலையும் உருவாகியிருக்கிறது. இந்த மாதிரி சூழலில்தான் நான் நாயகியாக நடித்து வரும் அறுவடை படமும் விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தை லாரன்ஸ் ராம் என்பவர் இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார். அவரது மனைவியாக நான் நடிக்கிறேன்.

இன்றைய விவசாயிகளின் நிலையை அப்படியே திரையில் கொண்டு வரும் இந்த படத்தில் ஒரு ஏழை விவசாயியின் மனைவியாக நான் நடிக்கிறேன். அந்த கதாபாத்திரத்திற்காக என்னை முழுமையாக மாற்றி நடித்துள்ளேன். மெச்சூரிட்டியான வேடம் என்பதால் இந்த முதல் படமே தமிழில் எனக்கு ஒரு நல்ல இடத்தை பிடித்துத்தரும் என்று நம்புகிறேன். அதேபோல், தொடர்ந்து இந்த மாதிரி அழுத்தமான வேடங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார் மலையாள நடிகை வைகா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget