பிரியமான பிரேமி அனுபமா

மல்லிகை மணக்கும் கருங்கூந்தல் தோட்டம்... ஆளை கவிழ்க்கும் காந்த கண்களின் நோட்டம்... இதழ்களில் வழியும் தேன் சுவை புன்னகை, உன்னுடன் மோகம் கொண்டு உன்னை சூழ்ந்து
சுற்றும் மேகத்து வெண்புகை. பார்த்தவுடன் பளிச்சென பிடித்து போகும் பேரழகு பாவை... பிரியமான பிரேமமாய் மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழில் காதல் 'கொடி'யாய் படர்ந்திருக்கும் நடிகை 'அனுபமா பரமேஸ்வரன்' அள்ளி தெளித்த பேச்சு துளிகள்...

பிரேமம் படத்திற்குள் எப்படி வந்தீர்கள்...

என்னோட தோழிகள் 'பிரேமம்' படத்தின் 'மேரி ஜார்ஜ்' கேரக்டர், ஆடிஷன்க்கு என் போட்டோவை அனுப்பினாங்க. போட்டோ பார்த்ததும் டைரக்டருக்கு பிடிச்சு போச்சு, நானும் நடிக்க வந்துட்டேன்...

கொடி?

தமிழில் முதல் படம்... எப்படி நடிக்கணும்னு கூட பிளான் பண்ணல. 'மாலதி'ங்குற துருதுரு கேரக்டர் ரொம்ப, ரொம்ப பிடிச்சிருந்தது.

ஹீரோ தனுஷ்...

நல்லா சப்போர்ட் பண்ணினாரு, டைரக்டரும் நிறைய 'ஆக்டிங் டிப்ஸ்' கொடுத்தாரு.

எதிர்பார்ப்பு?

அதெல்லாம் இல்லை, என்னால யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது. கிடைக்கும் வாய்ப்புகளை சந்தோஷமா ஏத்துக்கணும்.

பிடித்த தமிழ் படம்...

மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடிச்ச 'கன்னத்தில் முத்தமிட்டால்' படம். காதல், தாய்மை என ஒரு 'எமோஷனல் பீல்' இருக்கு. இப்போ பார்த்தா கூட அழுகை வரும்.

தமிழ் பேச்சு எப்படி வசமானது...

தமிழ் படங்கள் அதிகம் பார்ப்பதால் கொஞ்சம் தமிழ் பேசுறேன்...

விரும்பும் கேரக்டர்...

நான் எப்பவுமே போல்டு. 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஐஸ்வர்யா ராய் கேரக்டர் மாதிரி தைரியமான பொண்ணா நடிக்க ஆசை.

பிடித்த ஆடை

ஜீன்ஸ், டாப்ஸ்... டிரஸ்சிங் விஷயத்தில் நான் சிம்பிள்.

அடிக்கடி ருசிப்பது...

கேரள சிக்கன் பிரியாணி இருந்தா, சிக்கனமே இல்லாம சாப்பிடுவேன்.

திரைப்படத்துறை தவிர வேறு எதிலாவது ஆர்வம்?

'கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்' படிப்பதால், பத்திரிக்கை துறையில் ஆர்வம் உண்டு, நடிக்க வரலேன்னா ரிப்போர்ட்டரா இருந்திருப்பேன்.

ஹாபி?

பாட்டு பாடுவதும், கேட்பதும் என்னோட 'ஹேப்பி ஹாபி'...

ரசிகர்கள்...

என்னை எங்க பார்த்தாலும் 'பிரேமம் மேரி ஜார்ஜ்'னு தான் கூப்பிடுறாங்க, 'ஐ லைக் மை பேன்ஸ்'...
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget