காமெடி நாயகியான நந்திதா

விமலுடன் நடித்த அஞ்சல படத்திற்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார் நந்திதா. இந்த இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயாராகி விட்டபோதும்,
திரைக்கு வருவதில் தாமதமாகி வருகிறது. அதோடு, தான் தமிழில் அறிமுகமான அட்டகத்தி படத்தின் நாயகனாக தினேசுடன் மீண்டும் உள்குத்து படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் தனக்கு ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கும் நந்திதா, நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருப்பதால் அது தனது ஹீரோயின் இமேஜை டேமேஜ் பண்ணி விடுமோ என்கிற அச்சத்திலும் இருக்கிறார்.

இந்தநிலையில், தற்போது தெலுங்கில் எக்கடிக்கி பொத்தவு சின்னவட என்ற படத்தில் நடித்து வருபவர், தமிழில் கபாலி டாக்கீஸ் என்றொரு படத்திலும் நடிக்கிறார் நந்திதா. இதுவரை ரொமான்டிக் நாயகியாக நடித்தவர் இந்த படத்தில் காமெடி நாயகியாக நடித்து வருகிறார். இதே படத்தில் கோவை சரளா, இமான் அண்ணாச்சி உள்பட சில மெகா காமெடி நடிகர் நடிகைகளும் நடித்திருப்பதால் முடிந்தவரை காமெடி காட்சிகளில் ஸ்கோர் பண்ணியுள்ள நந்திதா, இனிமேல் காமெடி கதைகளிலும் கவனம் செலுத்தப்போவதாக கூறி வருகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget