திருமணம், விவாகரத்துக்கு போன்ற நிகழ்வுகள் நடந்த பிறகு வானம் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த சோனியா அகர்வால், ஒரு நடிகையின்
வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர், இப்போது சாயா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். கதைப்படி இந்த படத்தில் கிரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் சோனியா அகர்வால். சாயா என்றொரு நிழல் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மர்மமான முறையில் சிலர் இறந்து விட, அந்த கொலையை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்கும் போலீசாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் சோனியா அகர்வாலுக்கு ஒரு பாடல் முதலில் வைத்திருந்தார்களாம். அதன்பிறகு கெத்தான ஒரு போலீஸ் அந்த பாடலை பாடினால் கதையின் வலு குறைந்து விடும் என்று அவருக்கு பாடலே கொடுக்கப்படவில்லையாம். மாறாக, ஒரு அதிரடியான சண்டை காட்சி இடம்பெற்றுள்ளதாம். கதைப்படி, பேய் என்ற பெயரில் கொலைகளை செய்த நபர்களை சோனியா அகர்வால் கண்டுபிடிக்கும்போது ஒரு அதிரடியான பைட் இடம்பெற்றுள்ளதாம். 4 நிமிடம் நடக்கும் அந்த காட்சியில் ஒரு வாரத்திற்கு மேலாக நடித்தாராம் சோனியா அகர்வால். முதன்முதலாக நடித்துள்ள ஆக்சன் கதை என்றபோதும், எந்தவித குறையும் இல்லாத அளவுக்கு அவர் நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

கருத்துரையிடுக