ஒர்ஜினல் கிராமத்து பெண்ணான அமலாபால்

அம்மா கணக்கு படத்திற்கு பிறகு இனிமேல் அமலாபால் கேரக்டர் நடிகையாகி விடுவார் என்று நினைத்த நேரத்தில் திடுதிப்பென்று மறுபடியும்
அவர் கதாநாயகியாக பல படங்களில் கமிட்டாகி விட்டார். அந்த வகையில், விஐபி-2, திருட்டுப்பயலே-2, வடசென்னை, சின்ட்ரெல்லா என்ற பெயரில் தயாராகும் முண்டாசுப்பட்டி-2 என பல படங்களில் பிசியாகி விட்டார். அதோடு நடிகை ரேவதி இயக்கும் மலையாள படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
இப்படி சினிமாவில் மீண்டும் பிசியாகி விட்ட அமலாபால், முண்டாசுப்பட்டி-2 வான சின்ட்ரெல்லா படத்திற்காக தன்னை மேலும் இளமையாக மாற்றி நடிக்கப் போகிறாராம். குறிப்பாக, முதல் பாகத்தில் நடித்த நந்திதாவைப்போன்று இந்த பாகத்திலும் அமலாபாலுக்கு கிராமத்து வேடம்தானாம். குறிப்பாக, அச்சம் மடம் நாணம் நிறைந்த ஒர்ஜினல் கிராமத்து பெண்ணாக அவரை காட்டப்போகிறாராம் டைரக்டர் ராம்குமார். அதனால் இந்த படத்தில் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்து மார்க்கெட்டை இன்னும் ஸ்டெடி பண்ணி விட வேண்டும் என்று இதுவரை தன்னிடமிருந்து பெரிய அளவில் வெளிப்படாத கிராமத்து நடிப்பை முழுமையாக இந்த படத்தில் கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறாராம் அமலாபால்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget