விஜய் டிவியில் ஒளிபரப்பான என் பெயர் மீனாட்சி தொடரில் வில்லியாக நடித்தவர் பிரியா. தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிள்ளை தொடரில் மிர்ச்சி செந்திலுடன்
இணைந்து நடித்து வருகிறார்.
இதுபற்றி பிரியா கூறுகையில், மாப்பிள்ளை தொடரில் மிர்ச்சி செந்திலை ஒன்சைடாக லவ் பண்ணும் கேரக்டரில் நடிக்கிறேன். திருமணத்திற்கு முன்பு அவரை காதலிக்கும் நான், பின்னர் திருமணமான பிறகு அவருடன் நட்பாக பழகி வருகிறேன். ரொம்ப இயல்பான கதாபாத்திரம். அதை உணர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மேலும், என் பெயர் மீனாட்சி என்ற தொடரில் நெகடீவ் ரோலில் நடித்தேன். அதைப்பார்த்து நேயர்கள் திட்டினாலும், பெரிதாக ரீச் ஆனது. அதோடு எனக்கும் வில்லி வேடங்களில் நடிப்பதில்தான் ஆர்வம் அதிகம். அதனால் என்னையுமறியாமல் அந்த மாதிரியான வேடங்களில் அதிக ஈடுபாட்டுடன் நடிப்பேன். சீரியல் வில்லிகளை திட்டித்தீர்க்கும் நேயர்கள் இப்போது திட்டுவது குறைந்து விட்டது. வில்லிகளின் நடிப்பையும் ரசிக்கிறார்கள். அந்த அளவுக்கு பெண்கள் மனப்பக்குவம் பெற்று விட்டனர்.
அதோடு, சினிமாவில் பசங்க-2 உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறேன். இப்போதும் சில படங்களில் நடிக்கிறேன். தேவதர்ஷினி போன்று ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அவர் அளவுக்கு எனக்கு காமெடி வராது என்றாலும், செண்டிமென்ட், எமோசனல், நெகடீவ் என மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து ஒரு நல்ல குணசித்ர நடிகையாக சினிமாவில் இடம்பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், சீரியலில் நடித்துக் கொண்டே நல்ல சினிமா வாய்ப்புகளுக்காகவும் முயற்சி எடுத்து வருகிறேன் என்கிறார் பிரியா.

கருத்துரையிடுக