கோலிவுட் கோதாவில் சுபிக்ஷா

பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் நடித்தவர் சுபிக்ஷா. அதன்பிறகு சில படங்களில் நடித்தவர் தற்போது கடுகு, நேத்ரா, ரீங்கார ஓசை படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படங்கள்
திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகைகளில் நானும் ஒருத்தியாக இருப்பேன் என்கிறார் சுபிக்ஷா.

மேலும் அவர் கூறுகையில், கதாநாயகி என்றால் ரொமான்ஸ் செய்வது, மரத்தை சுற்றி டூயட் பாடுவது என்று நான் நினைக்கவில்லை. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாயகியாக நடிக்க வேண்டும். குறிப்பாக, காதலிப்பது மட்டுமின்றி, மாறுபட்ட பர்பாமென்ஸ் கொடுக்கும் வேடங்களில் நடிக்க வேண்டும். அந்த வகையில், இப்போது நான் நடித்து வரும் கடுகு, நேத்ரா படங்கள் என்னை மாறுபட்ட நாயகியாக வெளிப்படுத்தும் படங்களாக அமைந்துள்ளன.

இதில், நேத்ரா படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறேன். என்னைச்சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், அடுத்து கனடாவில் நடக்கிறது. விசா கிடைப்பதற்காக காத்திருக்கிறோம். அனேகமாக அடுத்த மாதம் இறுதியில் சென்று விடுவோம். இந்த படம் மிக வித்தியாசமான கதையில் உருவாகிறது. ஆக்சன் பட டைரக்டரான ஏ.வெங்கடேஷ், விறுவிறுப்பான கதையில் இந்த படத்தை இயக்கி வருகிறார். அதனால் இந்த படம் வெற்றி பெற்று, கோலிவுட்டின் எனக்கும் ஒரு இடத்தை பிடித்துத்தரும் என்று எதிர்பார்த்திருக்கிறேன் என்கிறார் சுபிக்ஷா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget