லண்டன் பேயான த்ரிஷா

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை-2 படத்தில் பேயாக நடித்தவர் த்ரிஷா. அதன்பிறகு நாயகி என்ற படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தவர், தற்போது மோகினி, சதுரங்கவேட்டை-2, கர்ஜனை,
1818 என பல படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, இதில் எந்த படத்திலும் அவர் டூயட் பாடும் நாயகியாக நடிக்கவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

இதில், மாதேஷ் இயக்கத்தில் நடித்துள்ள மோகினி படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. கதைப்படி, சமையல் கலை வல்லுனரான த்ரிஷா தமிழகத்தில் இருந்து ஒரு டீமுடன் லண்டன் செல்வாராம். அங்கே போன இடத்தில் ஒரு பேய் அவரை அட்டாக் பண்ணுமாம். அந்த பேயும் த்ரிஷாதானாம். அவர் யார், எதற்காக இந்த த்ரிஷாவை அட்டாக் பண்ணுகிறார் என்பது தான் மோகினி படத்தின் கதையாம்.

அதோடு, அரண்மனை-2 படத்தில் நடித்த த்ரிஷாவை விட இந்த படத்தில் நடித்துள்ள த்ரிஷா, பேய் கெட்டப்பில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். குறிப்பாக த்ரிஷாவை மிரட்டல் பேயாக காட்ட வேண்டும் என்பதற்காக சில கோடிகளை கொட்டி கிராபிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார் டைரக்டர் மாதேஷ்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget