சீரியல் நாயகி ரம்யா கிருஷ்ணன்

ஆம்பள, பாகுபலி படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாகுபலி-2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். அதோடு,
வம்சம் என்ற சீரியலை தயாரித்து அதில் சக்தி, அர்ச்சனா என்ற இரண்டுவிதமான வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், வம்சம் சீரியல் ஸ்பாட்டில் சில நாட்களில் தானே சமைத்து அதை யூனிட்டில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு கொடுத்தும் அசத்துகிறாராம் ரம்யா கிருஷ்ணன்.

இதுகுறித்து வம்சம் சீரியல் குழுவினர் கூறுகையில், ரம்யா கிருஷ்ணன் மேடம் ஸ்பாட்டிற்குள் வந்தாலே ஜாலியாக இருக்கும். அனைவரிடமும் கலகலப்பாக காமெடியாக பேசுவார். இதனால் ரம்யா மேடம் ஸ்பாட்டிற்கு எப்போது வருவார் என்று அனைவருமே காத்திருப்பார்கள். அதோடு, சில நாட்களில் கேரவனுக்குள்ளேயே அவர் சமைக்கத் தொடங்கி விடுவார். கிச்சன் கில்லாடியான அவர், நான்வெஜ், வெஜிடேரியன் என சமையல் செய்து அதை யூனிட்டில் நடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கொடுப்பார். அவரது சமையல் ரொம்ப டேஸ்டியாக இருக் கும் என்பதால் அவர் சமைத்ததை சாப்பிட அனைவரும் ஆர்வமாக இருப்போம் என்கிறார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget