பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். சென்னையில் உள்ள பிரபல வணிகவளாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த
சோனாக்ஷி சின்ஹா. நிகழ்ச்சியின் முடிவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். ஆனால் அடிக்கடி வந்ததில்லை. லிங்கா படம் வெளியீட்டின்போது வந்திருக்கிறேன். அதன் பிறகு இப்போதுதான் வருகிறேன். லிங்காவுக்கு பிறகு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அப்போது நான் இந்தியில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை.
சமீபகாலமாக தமிழ் படங்கள் பார்த்து வருகிறேன். வித்தியாசமான கதை களங்களை தேர்வு செய்து படமாக்குகிறார்கள். அதனால் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். வழக்கமான கதையாக இல்லாமல் வித்தியாசமான, எனது பங்களிப்பு அதிகமாக இருக்கிறபடியான கதைகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன். நான் நடித்த இந்திப் படமான லூத்ராவை தமிழில் ரீமேக் செய்தால் அதில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. தமிழில் ரஜியுடன் நடிக்கும் வாய்ப்பையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்கிறார் சோனாக்ஷி.

கருத்துரையிடுக