பின்னணி பாடி அசத்தும் அக்சயா

கலாபக்காதலன், உளியின் ஓசை, எங்கள் ஆசான், உயர்திரு 420 உள்படபல படங்களில் நாயகியாக நடித்தவர் அக்சயா. தற்போது யாளி என்றொரு படத்தை இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார்.
தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் யாளி படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இந்த படம் குறித்து அக்சயா கூறுகையில், சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் ஒரு அநியாயத்துக்கு எந்த மாதிரியான தீர்ப்பு சொன்னால் நன்றாக இருக்கும் என்பது பற்றிய கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். 3 கேரக்டர்களை சுற்றி பின்னப்பட்டுள்ள கதை. இதில் நான் லீடு ரோலில் நடிக்கிறேன். தமன் நாயகனாக நடிக்க, இரண்டாவது நாயகனாக புதுமுகம் அர்ஜூன் நடித்துள்ளார். ஊர்வசி, மனோபாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த யாளி படம் முழு எண்டர்டெய்ன்மென்ட் அல்லது முழு திரில்லர் படம் என்று சொல்ல முடியாது.

சாய் இசையமைத்துள்ள இந்த படத்தில் வைரமுத்து ஒரு டூயட் பாடல் எழுதியிருக்கிறார். அதோடு, பெண் குரலுக்கான எல்லா பாடல்களையும் நானே பின்னணி பாடியிருக்கிறேன். நடிப்பு, நடனத்தைப்போலவே பின்னணி பாடுவதிலும் எனக்கு ஆர்வம் மிகுதி. இதற்கு முன்பு ஒரு இந்தி படத்தில் பின்னணி பாடிய நான், உத்ரா என்ற படத்திலும் பாடியிருக்கிறேன். இப்போது யாளியில் பாடியுள்ளேன். தொடர்ந்து பின்னணி பாடுவதில் ஆர்வமாக இருக்கிறேன்.

மேலும், எனக்கு டைரக்சனில் முதலில் விருப்பம் இல்லை. சில சூழ்நிலைகளால் அதை சேலஞ்சிங்காக எடுத்து பண்ணினேன். இந்த முயற்சியில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். கால் எடுத்து வைக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கனும். வைத்தபிறகு முடிக்காமல் விடக்கூடாது என்பதுதான் எனது பாலிஸி. அதேபோல் யாளி படத்தை நான் நினைத்தது போலவே சிறப்பாக இயக்கி முடித்திருக்கிறேன். இந்த படத்தை கண்டிப்பாக தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற முழு நம்பிக்கை உள்ளது. இந்த படத்திற்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸைப் பொறுத்து அடுத்த படம் இயக்குவது குறித்து முடிவு செய்வேன் என்கிறார் அக்சயா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget