யானையால் கத்தி கூச்சல் போட்ட கோபிகா

ஹரி கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஆறாம் வேற்றுமை. அஜய்-கோபிகா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் ராகவேந்திரன்
இசையமைத்துள்ளார். இப்படம் ஆதிவாதி மக்களின் பிரச்னையை சொல்லும் கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டத்திலுள்ள கூனிக்காடு என்கிற மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அப்போது ஒருநாள் மலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியபோது தண்ணீருக்காக கீழே இறங்கி வந்த யானைகள் படப்பிடிப்பு நடத்திய இடத்திலேயே கூட்டமாக தங்கிவிட படப்பிடிப்புக்கான கருவிகளை அப்படியே போட்டு விட்டு மலையில் இருந்து கீழே இறங்கி வந்து விட்டார்களாம்.

அதோடு, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து கரும்பு தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள வீடுகளில் தங்கியிருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த யானைக்கூட்டம் நள்ளிரவு நேரத்தில் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்து ஆறாம் வேற்றுமை படக்குழுவினர் தங்கியிருந்த பகுதிக்குள் வந்திருக்கிறது. குறிப்பாக, கதாநாயகி கோபிகா தனது அம்மாவுடன் தங்கியிருந்த வீட்டை யானைகள் முற்றுகையிட்டுள்ளது. இதனால் பயத்தில் கத்தி கூச்சல் போட்டிருக்கிறார் கோபிகா. அதையடுத்து அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் தங்கியிருந்து படக்குழுவினர் பெரிய அளவில் சத்தம் எழுப்பி அந்த யானைகளை அங்கிருந்து விரட்டியடித்து கோபிகாவை காப்பாற்றியுள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget