போலீஸ் அதிகாரியான சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வால் தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். சாயா என்ற படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக
நடித்துள்ளார். அதேபோல எவனவன் என்ற படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வில்லன் நடிகர் வின்செண்ட் அசோகனும் இதில் போலீஸ் அதிகாரி. இருவரும் இணைந்து ஒரு வழக்கை துப்பறிவது போன்ற கதை இது.

எவனவன் படத்தை ட்ரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். வின்செண்ட் அசோகன், சோனியா அகர்வாலுடன் அகில் சந்தோஷ், சாக்ஷி சிவா, சரண் ஆகியோரும் நடிக்கிறார்க்ள. அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார், பெடோ பீட் இசை அமைக்கிறார். மெய்பொருள், பனித்துளி படங்களை இயக்கிய ஜே.நட்டிகுமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:

‛‛எதையும் திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள். இதை செய்தால் இப்படி செய்தால் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்தே செய்பவர்கள் பலர். பின் விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் பலர். அப்படித்தான் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது. என்பதுதான் கதைக் களம்.

இதில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றம் ஒன்றை விறுவிறுப்பாக கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். மெய்ப்பொருள், பனித்துளி படங்களின் படிப்பிடிப்பு பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கினோம். ஆனால் எவனவன் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஆந்திராவில் நடந்தது பாடல் காட்சிகள் மலேசியாவில் படமானது. என்றார் இயக்குனர் நட்டிகுமார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget