பீல் பண்ணிய மேகா ஆகாஷ்

விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். அந்த படத்திற்கு பிறகு அவர் இயக்கிய படம் ஒரு பக்க கதை. நடிகர் ஜெயராமின் மகன்
காளிதாஸ்-மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்த நடித்த இந்த படம் 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. என்றாலும் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் அதையடுத்து காளிதாஸ் நாயகனாக நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படம் திரைக்கு வந்து விட்டது.

மேலும், ஒரு பக்க கதையில் நாயகியாக நடித்த மேகாஆகாஷ்க்கு அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படவாய்ப்பு கிடைத்தது. அதனால், ஒரு பக்க கதை படத்தைப்பற்றி கவலைப் படாமல் பெரிய டைரக்டர், பெரிய நடிகரின் படம் கிடைத்து விட்டது என்று அந்த படத்தில் கமிட்டாகி உற்சாகமாக நடித்து வந்தார் மேகா ஆகாஷ். அதோடு முதல் படத்தில் நடிக்க சில கண்டிசன்களை போட்டு நடித்தவர், இரண்டாவது படத்தில் எந்தவித கண்டிசனும் போடாமல் நடித்தார்.

ஆனால் அப்படி அவர் நடித்து வந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படமும் தற்போது சில மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது. இப்படி தான் நடித்த இரண்டு படங்களுமே முடிவடையாமல் தாமதமாகிக்கொண்டிருப்பதால் பெரிய அளவில் பீல் பண்ணி வரும் மேகா ஆகாஷ், புதிய படங்களிலும் கமிட்டாக முடியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget