விஜய்யுடன் குஷி, திருமலை ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஜோதிகா. இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61-வது படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க
அவரிடம் பேசி வைத்திருந்தனர். ஆனால், இப்போது ஜோதிகா இப்படத்தில் நடிக்கவில்லை.
மேலும், ஜோதிகா வேடத்தில் நடிப்பதற்காக சில மாஜி நடிகைகளின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஓ காதல் கண்மணி, இருமுகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நித்யாமேனனிடம் பேசி வருகிறார்கள். கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறாமல், முக்கியமான கேரக்டர்கள் எதுவாக இருந்தாலும் நடிக்கக்கூடியவர் நித்யாமேனன் என்பதால் அவர் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

கருத்துரையிடுக