கொள்கையை தொடரும் தல

தமிழ்நாட்டு இளைஞர்கள் மிகவும் மாறிப் போய்விட்டார்கள் என ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது சமூக வலைத்தளங்களில்
பரவலான கருத்து எழுந்தது. ஆனால், போராட்டம் முடிந்த மறுநாளே 'பைரவா' படம் 100 கோடி வசூலித்துவிட்டதா ?, அஜித்தின் அடுத்த படத்தின் டைட்டிலை எப்போது அறிவிப்பார்கள் ?, 'சி 3' படம் திட்டமிட்டபடி வந்துவிடுமா ? என 'நார்மல் மோடு'க்கு வந்துவிட்டார்கள். தமிழ்நாட்டு மக்களையும் சினிமாவையும் தான் பிரிக்க முடியாது என்று பார்த்தால், இளைஞர்களையும், சினிமாவையும் இவ்வளவு நடந்தும் பிரிக்க முடியவில்லையே என சிலர் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி அவர்கள் சினிமாவை விட்டு விலகிச் சென்றுவிட்டால் அதன் பின் அதிகாலை காட்சிக்கு எப்படி கூட்டம் சேர்ப்பது, முதல் நாள் வசூல் 20 கோடி என எப்படி முழக்கமிட வைப்பது. அரசியல்வாதிகளை மட்டும் மாற்றினால் போதாது, ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நடிகர்களையும் இளைஞர்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என எதிர்கால இந்தியாவைப் பற்றிக் கவலைப்படும் அப்பாவி பொதுஜனங்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் 'மீட்டிங்' போடும் போது கூட்டம் வரவில்லை என்றால் அவ்வளவுதான், அதே போல முன்னணி நடிகர்களுக்கு முதல் நாள் முதல் காட்சி கூட்டம் வரவில்லை என்றால் அவ்வளவுதான், அவர்கள் மார்க்கெட் போய்விடும். அவர்களுக்குள் இருக்கும் ஆர்வத்தை துளி கூடக் குறைய வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நள்ளிரவில் தங்களது படங்களைப் பற்றிய அறிவிப்பு வந்தால் கூட அவர்கள் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு தன் படத் தலைப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அவர்களைக் காக்க வைக்க வேண்டும் என சிலர் செய்து கொண்டுதானிருக்கிறார்கள்.

அந்த விதத்தில் அஜித் கடந்த சில படங்களாகவே தன் படங்களின் அறிவிப்புகள் அனைத்தையும் வியாழக் கிழமைகளில் நள்ளிரவு 12 மணிக்கு அறிவிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இன்று நள்ளிரவில் அவருடைய 'விவேகம்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதுவும் போஸ்டர் வெளியான சில மணிநேரங்களிலேயே அதை பிளக்ஸ் போர்ட்டில் ஏற்றி சிலர் பாலாபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். ஒரு நடிகர் படத்தை வரவேற்க வேண்டியது தான் அதற்காக நள்ளிரவிலேயே போஸ்டர், பிளக்ஸ் எல்லாம் அடித்து பாலாபிஷேகம் செய்வது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget