பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான ரோஹித் ஷெட்டி, கோல்மால் படங்களின் வரிசையில் விரைவில் கோல்மால்-4 படத்தை இயக்க இருக்கிறார். கோல்மால் அகைன்
படத்தில் அஜய் தேவ்கன், அர்ஷத் வர்சி, துஷார் கபூர் மற்றும் நடிகை பரினீதி சோப்ரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகை தபுவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கயிருக்கிறார்.
இதைப்பற்றி தபு கூறியதாவது..."கோல்மால் அகைன் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஆனால் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இல்லை. கோல்மால் வரிசையில் வந்த அனைத்து படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் இப்படத்தில் நடிக்கயிருக்கும் அனைவரும் எனக்கு நல்ல நண்பர்கள். நண்பர்களுடன் நடிப்பது மிகவும் அற்புதமாக இருக்கும் " என்றார்.
கோல்மால் அகைன் படத்தின் படப்படிப்பு இந்த மாதம் அல்லது மார்ச் மாதம் இருந்து துவங்கயிருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.

கருத்துரையிடுக