விஜய் ஆண்டனியின் சலீம் படத்தில் மஷ்காரா போட்டு மயக்குறியே என்ற பாடலில் நடனமாடி பிரபலமானவர் அஷ்மிதா. அதையடுத்து, நையப்புடை, பழைய வண்ணாரப்பேட்டை,
விழித்திரு, அட்டு என பல படங்களில் குத்துப்பாடல்களில் நடனமாடிய அவர், தற்போது இட்லி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.
தனது ஹீரோயினி அவதாரம் குறித்து அஷ்மிதா கூறுகையில், கதாநாயகியாக வேண்டும் என்றுதான் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனேன். ஆனால் சூழ்நிலை என்னை குத்துப்பாட்டு நடிகையாக்கி விட்டது. அதனால் கிடைத்த வாய்ப்பு களை பயன்படுத்திக்கொண்டே கதாநாயகி வாய்ப்புக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தேன். அப்போதுதான் இட்லி படத்தில் நாயகி வாய்ப்பு கிடைத் தது. குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் துளியும் கிளாமர் காட்டாத குடும்ப வேடத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் கோவைசரளா, சரண்யா, கல்பனா ஆகியோர் பாட்டி வேடத்தில் நடித்துள்ளனர். இதில் எனது பாட்டியாக சரண்யா நடித்துள்ளார். இந்த படத்தில் நல்ல பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறேன். அதனால் இந்த படத்திற்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்கள் எனக்கு கிடைக்கும்.
மேலும், அகோரா என்றொரு படத்தில் செகண்ட் ஹீரோயினியாகவும் நடிக்கிறேன். என்றாலும், குத்துப்பாட்டுக்கு நடனமாடுவதை தவிர்க்க மாட்டேன். ஹீரோயினியாக நடித்துக்கொண்டே எல்லாவிதமான வேடங்களிலும் நடிப்பேன். முக்கியமாக, என்னை கவர்ந்த நடிகையான விஜயசாந்தி போன்று ஆக்சன் கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதனால் ஜிம்முக்கு சென்று தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுப்போக்கியிருக்கிறேன். அந்த வகையில், மஷ்காரா போட்டு மயக்குறியே பாடலில் ஆடும்போது இருந்ததை விட தற்போது 10 கிலோ வெயிட் குறைத்து ஸ்லிம்மாகி விட்டேன் என்கிறார் அஷ்மிதா.

கருத்துரையிடுக